தென்காசி தொகுதி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
- 9-வது நாளாக இன்று ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
- இதுவரையில் 25 தொகுதி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி உள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
பாராளுமன்ற தேர்தல் முடிவு குறித்தும் அடுத்த கட்ட செயல்பாடுகள் பற்றியும் அவர் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார்.
2 கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பகிரங்கமாக தங்கள் மனதில் உள்ள ஆதங்கங்களை கொட்டி தீர்த்து வருகின்றனர். 9-வது நாளாக இன்று ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
தென்காசி பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தார். மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அனைத்து அணி நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொருவருக்கும் பேசுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இதுவரையில் 25 தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி இன்று மாலையில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்திக்கிறார்.
நாளை காலையில் திருப்பூர் தொகுதியிலும், மாலையில் கடலூர் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறாது. மீண்டு்ம திங்கட்கிழமை நடக்கிறது.