தேர்தல் பறக்கும் படை: மாட்டு வியாபாரிகள் வரத்து குறைவால் மாடுகள் வியாபாரம் மந்தம்
- வாரந்தோறும் கோடி கணக்கில் மாடுகள் வியாபாரம் நடக்கும் சந்தையில் இன்று இலட்சக்கணக்கில் மட்டுமே வியாபாரம்.
- வியாபாரிகள் வராததால் மாடுகள் வரத்தும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் தேப்பனந்தல் மாட்டுச் சந்தை தமிழகத்தில் பிரபலமான மாடு சந்தையாக விளங்கி வருகிறது.
வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த மாட்டுச்சந்தையில் திருவண்ணாமலை வேலூர் ராணிப்பேட்டை விழுப்புரம் கடலூர் திருப்பத்தூர் தர்மபுரி தேனி மதுரை சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மாடுகள் மற்றும் பல நூறு மாற்று வியாபாரிகள் கலந்துகொண்டு பல கோடி வர்த்தகம் நடைபெறும் சந்தையாக விளங்கும் கேளூர் மாட்டுச் சந்தையில் இன்று தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை காரணமாக மாட்டுச் சந்தைக்கு பணங்கள் கொண்டு வருவதில் மாற்று வியாபாரிகளுக்கு பெருத்த சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் இன்று நடைபெறும் கேளூர் மாட்டுச்சந்தைக்கு மாடு வியாபாரிகளின் வரத்து குறைந்துள்ளதால் மாடுகள் விற்பனையாவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து ஒரு சில மாவட்டங்களில் இருந்து மட்டுமே மாடுகள் குறைந்த அளவிலே வந்துள்ளதால் வியாபாரிகளும் குறைந்த அளவில் கலந்து கொண்டனர். கோடிக்கணக்கில் நடைபெறும் இந்த மாட்டுச்சந்தையில் இன்று லட்சக்கணக்கில் தான் வியாபாரம் நடைபெற்றது. வியாபாரம் மந்தமாக நடைபெறுவதாக மாட்டுச் சந்தையில் உள்ள மாடு வியாபாரிகள் மாடுகளை விற்க வந்திருக்கும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வியாபாரிகள் வராததால் மாடுகள் வரத்தும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.