போலி லேபிள் ஒட்டி மது விற்ற தந்தை-மகன் கைது: கயத்தாறு போலீசார் நடவடிக்கை
- கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் சுடுகாட்டு பகுதியில் இருந்து போலீசாரை பார்த்ததும் 2 பேர் தப்பி ஓடினர்.
- புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து சுடுகாட்டுப்பகுதியில் பதுக்கி வைத்துள்ளனர்.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் சுடுகாட்டு பகுதியில் இருந்து போலீசாரை பார்த்ததும் 2 பேர் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து ஆத்திகுளம் கீழத்தெருவை சேர்ந்த கோபால் (வயது 47) மற்றும் அவரது மகன் முத்துபிரகாஷ் என்ற படையப்பா (24) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து சுடுகாட்டுப்பகுதியில் பதுக்கி வைத்துள்ளனர். பின்னர் மதுபான போலி லேபில்களை ஒட்டி மிலிட்டரி மது என விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.