தமிழ்நாடு

வெற்றி முழங்க வரும் அண்ணாமலை பாரு... கங்கை அமரன் பாடிய தெம்மாங்கு பாடல்

Published On 2023-01-24 10:05 GMT   |   Update On 2023-01-24 10:05 GMT
  • தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பற்றி இசை அமைப்பாளர் கங்கை அமரன் தெம்மாங்கு பாணியில் பாடல் பாடி இருக்கிறார்.
  • இசை அமைப்பாளர் கங்கை அமரன் தெம்மாங்கு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பற்றி இசை அமைப்பாளர் கங்கை அமரன் எழுதி தெம்மாங்கு பாணியில் பாடி இருக்கும் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பாடல் வருமாறு:-

'வெற்றி முழங்க வரும் அண்ணாமலை பாரு

எட்டு திசையும் எட்டி சுத்தி வரும் தேரு.

ஏழைக்கும் பாழைக்கும் நாளைக்கு நல்லது வரும்

ஊருக்கும் நாட்டுக்கும் உண்மையிலே நம்பிக்கை தரும் கூட்டமெல்லாம் சேர்ந்து அவர

கும்பிடுது பாரு கோடி நலம் காட்டும்

சக்தி உள்ள ஆளு நம்மவரு தான்

நாளை வரும்போது இவரு மேல இருப்பாரு

என் சொல்லு பலிக்கும் அது ஜெயிக்கும்

கூடாத கூட்டம் கூடி வரும் பாரு

வாங்காத பேரு வாங்கி வந்தார் பாரு

இனி ரொம்ப மேல ஏறப் போறார் பாரு

லஞ்ச பெருச்சாளி சுத்தி வரும்போது கண்ணால பாத்தே இவர் கட்டிப் போடுவாரு

இனி மேல நல்ல காலம் இப்ப வந்துட்டதய்யா

நமக்காக அவர் இருப்பார் ரொம்ப நல்ல படியா நல்லபடியா.

Tags:    

Similar News