தமிழ்நாடு
குண்டர் சட்டத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது- சென்னை ஐகோர்ட்
- குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து செல்வராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
- யார் குண்டர்கள் என்பது குறித்து அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினர்.
சென்னை:
நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து செல்வராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல் துறை தரப்பில், மனுதாரரின் உதவியுடன் ரூ.3.30 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதால் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், குண்டர் சட்டத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. தனி நபர் சார்ந்த குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தை பயன்படுத்தக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மேலும் யார் குண்டர்கள் என்பது குறித்து அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினர்.