தமிழ்நாடு

முருகன் உள்ளிட்ட 4 பேரையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது- கவுதமன் அறிக்கை

Published On 2022-11-15 08:35 GMT   |   Update On 2022-11-15 08:35 GMT
  • விடுதலைப் பெற்றவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்குள் அதிலுள்ள நால்வரை மட்டும் தனிமைப்படுத்தி திருச்சி சிறப்பு முகாமில் பூட்டி சிறை வைத்திருப்பதென்பது ஒரு கொடூர வன்முறையாகும்.
  • நால்வரின் விருப்பம் இல்லாமல் இலங்கைக்கு அனுப்பினாலும் ஒட்டுமொத்த தமிழர்களின் மிகக் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிவரும்.

சென்னை:

தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் டைரக்டர் கவுதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 6 பேரையும் விடுதலை செய்திருப்பது வரவேற்பிற்குரியது.

விடுதலைப் பெற்றவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்குள் அதிலுள்ள நால்வரை மட்டும் தனிமைப்படுத்தி வெளிநாட்டவர்கள் என்று காரணம் கூறி மீண்டும் திருச்ச்சி சிறப்பு முகாமில் பூட்டி சிறை வைத்திருப்பதென்பது ஒரு கொடூர வன்முறையாகும்.

தமிழக அரசு உடனடியாக அவர்களை திறந்த வெளிக்குள் அனுமதித்து அவர்கள் விரும்புகிற அயல்நாட்டிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டுமென தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

நால்வரின் விருப்பம் இல்லாமல் இலங்கைக்கு அனுப்பினாலும் ஒட்டுமொத்த தமிழர்களின் மிகக் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிவரும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News