வேலூரில் சுட்டெரித்த வெயிலுக்கு இடையே ஆலங்கட்டி மழை- மக்கள் உற்சாகம்
- வேலூர் மாவட்டத்தில் இன்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது.
- சேலம் ஏற்காட்டில் சுட்டெரித்து வந்த வெயிலுக்கு இடையே கோடை மழை.
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்றுமு், நாளையும் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, மே 4ம் தேதி முதல் மே 6ம் தேத வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெப்ப அலை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் கொளுத்தி வந்த நிலையில், திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது.
இந்நிலையில் பேரணாம்பட்டு, குடியாத்தம் சுற்றுவட்டாரங்களில் ஆலங்கட்டியுடன் மழை பெய்ததால், சற்று வெப்பம் தணிந்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதேபோல், ராசிபுரத்தில் வெளியில் சுட்டெரித்து வந்த வெயிலுக்கு நடுவே திடீரென கோடை மழை பெய்தது.
இதேபோல், சேலம் ஏற்காட்டில் சுட்டெரித்து வந்த வெயிலுக்கு இடையே கோடை மழை கொட்டியது.
அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியதால் அங்கு வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.