- தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது.
- தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிச்சாங் புயல் எதிரொலியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி, தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால் சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
குறிப்பாக, சென்னை எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், எழும்பூர் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், அஸ்தினாபுரம், சிட்லபாக்கம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.