தமிழ்நாடு

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 78 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

Published On 2022-09-01 03:39 GMT   |   Update On 2022-09-01 03:39 GMT
  • ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
  • ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 5-வது நாளாக தடை விதித்தது.

பென்னாகரம்:

கர்நாடகா, கேரளா மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த இரு அணைகளில் இருந்து உபரிநீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, நாட்றாபாளையம், அஞ்செட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று மாலை வினாடிக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 78 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது. ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 5-வது நாளாக தடை விதித்தது.

ஒகேனக்கலில் வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News