தமிழ்நாடு (Tamil Nadu)
LIVE

லைவ் அப்டேட்ஸ்: ரெயில் விபத்து- முழு வீச்சில் தண்டவாளங்கள் சீரமைக்கும் பணி

Published On 2024-10-12 05:20 GMT   |   Update On 2024-10-12 08:26 GMT
  • எக்ஸ்பிரஸ் ரெயில் சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
  • ரெயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது.

அப்போது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

2024-10-12 08:26 GMT

கவரப்பேட்டை ரெயில் விபத்தில் சிக்கி தங்கள் உடமைகளை இழந்தவர்கள் அதனை பெற்றுள்கொள்ள ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, சென்னை ரெயில் நிலையம் சென்று தங்கம் உடமைகள் குறித்து அடையாளங்கள் கூறி பெற்றுக்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-10-12 08:20 GMT

கவரப்பேட்டையில் நடந்த ரெயில் விபத்தால் மற்ற ரயில்கள் தாமதமாகியுள்ளது. இதனால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதம்.

2024-10-12 07:22 GMT

கவரப்பேட்டையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை என்ற தகவலுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. அதேபோல், என்ஐஏ விசாரணை நடைபெறவில்லை என ரெயில்வே அதிகாரிகளும், போலீசாரும் தெரிவித்துள்ளனர்.

2024-10-12 07:17 GMT

 "ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே" - சு.வெங்கடேசன் எம்.பி.

2024-10-12 07:04 GMT

கவரப்பேட்டையில் ஏற்பட்ட ரெயில் விபத்து துரதிஷ்டமானது. ரெயில் விபத்துகள் நடக்காத வண்ணம் கவனமாக இருக்க வேண்டியது அரசின் கடமை- தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். 

2024-10-12 07:01 GMT

விபத்து நடந்த இடத்தில் ரெயில் பெட்டிகள் அகற்றிய நிலையில் புதிய தண்டவாளங்கள் ரெயிலில் கொண்டுவரப்பட்டு புதிய தண்டவாளங்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

2024-10-12 06:58 GMT

விபத்து குறித்து கூறிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், " விரைவு ரெயில் விபத்தில் சிக்கிய செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். காயமடைந்த 19 பேரும் முழு உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும்"என்றார்.

2024-10-12 06:23 GMT

ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதியை திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் ஆய்வு செய்தார்.

2024-10-12 06:19 GMT

ரெயில் விபத்து நடைபெற்ற கவரப்பேட்டையில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு. மெயின் லைனில் சென்ற ரெயில், லூப் லைனுக்கு மாறியது எப்படி என்றும், அல்லது இது சதிச்செயலா? என்பது குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இன்று காலையில் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

2024-10-12 05:51 GMT

ரெயில் விபத்துகள் குறித்து காங்கிரஸ் காட்டமாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கூறுகையில், "கவரைப்பேட்டை ரெயில் விபத்தின் புகைப்படங்களையும், காட்சிகளையும் பார்த்தாலே, அது மிகவும் கோரமான விபத்து என்பது தெரிகிறது. ஆனால், மத்திய ரெயில்வே அமைச்சர் அது ஒரு சிறிய விபத்து எனக் கூறி விட்டு எளிதில் கடந்துவிட்டார். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு நாளும் ரயில் விபத்துகள் நடந்தவண்ணமே உள்ளன. ஆனால் யாருக்கும் பொறுப்பென்பது இல்லை" என்றது.

Tags:    

Similar News