தமிழ்நாடு

அஸ்வினி சேகர்

நரிக்குறவ பெண்ணுக்கு கடன் வழங்க தாமதம் ஏன்?: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் விளக்கம்

Published On 2022-08-18 16:33 GMT   |   Update On 2022-08-18 16:33 GMT
  • பூஞ்சேரியில் இதுவரை ரூ.1.5 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல்
  • நரிக்குறவ பெண் அஸ்வினி சேகர் உள்ளிட்ட 12 பேருக்கு கடன் வழங்க ஆணை தயார் நிலையில் உள்ளது.

செங்கல்பட்டு:

முதல்வர் வழங்கிய கடனுதவி தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என பூஞ்சேரியைச் சேர்ந்த நரிக்குறவ பெண் அஸ்வினி சமீபத்தில் புகார் கூறியிருந்தார். முதல்வர் அறிவித்த ஒரு லட்சம் ரூபாய் லோன் யாருக்கும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நரிக்குறவ பெண் புகாரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் விளக்கம் அளித்துள்ளார். பூஞ்சேரியில் நரிக்குறவர் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு இதுவரை ரூ.1.5 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 54 இலவச வீட்டுமனை பட்டாக்கள், 35 சாதி சான்றிதழ்கள், 6 முதியோர் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

'அஸ்வினி சேகர் உள்ளிட்ட 12 பேருக்கு கடன் வழங்க ஆணை தயார் நிலையில் உள்ளது. அஸ்வினி சேகருக்கு ரூ.5 லட்சமும், மற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் கடன் வழங்க ஆணை உள்ளது. ஆனால் மற்றவர்களோடு சேர்ந்துதான் கடனை பெறுவேன் என அஸ்வினி சேகர் தெரிவித்ததால், தாமதம் ஆகிறது. அஸ்வினி சேகருக்கு கடை ஒதுக்கீடு செய்ய தயார் நிலையில் இருந்தது. ஆனால் அவர் அதை நிராகரித்துவிட்டார். நலத்திட்ட உதவிகளை செயல்படுத்துவதற்கு அப்பகுதி மக்களின் ஒத்துழைப்பு தேவை' என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News