தமிழ்நாடு
தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா - மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை
- தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
மதுரை:
முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ், ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மேலும், பல்வேறு கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் ஏராளமான பேர் வருகை தர உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.