தமிழ்நாடு

பிளஸ் 2 பொதுத்தேர்வில் விடைத்தாள் திருத்தியதில் குளறுபடி அம்பலம்

Published On 2024-05-31 06:21 GMT   |   Update On 2024-05-31 06:21 GMT
  • பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 6-ந்தேதி வெளியானது.
  • மாணவரின் விடைத்தாளை திருத்திய ஆசிரியர் 88 மதிப்பெண்கள் கொடுத்துவிட்டு, மேலே 58 என பதிவு செய்துள்ளார்.

சென்னை:

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்தது.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 6-ந்தேதி வெளியானது. விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் விடைத்தாள்களை திருத்தியதில் குளறுபடி நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது.

மறுகூட்டலுக்காக பணம் செலுத்தி விடைத்தாள் நகலை பெற்ற மாணவர் அதிர்ச்சி அடைந்தார்.

மாணவரின் விடைத்தாளை திருத்திய ஆசிரியர் 88 மதிப்பெண்கள் கொடுத்துவிட்டு, மேலே 58 என பதிவு செய்துள்ளார். விடைத்தாளை திருத்திய தமிழ் ஆசிரியர் ஆங்கிலத்தில் கையொப்பம் இட்டதும் தெரிய வந்தது.

மேலே குறிப்பிடப்படும் மதிப்பெண் மட்டுமே பதிவேற்றப்படும் என்பதால், சம்பந்தப்பட்ட மாணவருக்கு 30 மதிப்பெண்கள் குறைந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News