பாராளுமன்ற தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை தலைமை பார்த்துக் கொள்ளும்: மு.க.ஸ்டாலின் பேச்சு
- தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தி.நகரில் இன்று நடைபெற்றது.
- இதில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், நாம் கை காட்டுபவரே பிரதமராக வேண்டும் என்றார்.
சென்னை:
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தி,நகரில் இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை திமுக தலைமை பார்த்துக் கொள்ளும். யார் வெற்றி பெறுவார்களோ அவர் தான் வேட்பாளராக இருப்பார். இந்தத் தொகுதிக்கு இவர் தான் வேட்பாளர் என்ற உறுதி எதுவுமில்லை.
நாம் கை காட்டுபவரே பிரதமராக வேண்டும். 40 தொகுதிகளில் வென்றால் மட்டுமே அது சாத்தியம்.
சேலத்தில் அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். 5 லட்சம் பேர் கலந்து கொள்ளும் பிரமாண்ட மாநாடாக இருக்க வேண்டும்.
மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்கள் பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இனி எந்த காலத்திலும் மகளிர் வாக்குகள் நமக்குத்தான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் வேண்டியதில்லை.
தேர்தல் பணிகளை முன்னெடுத்துச் செல்லுங்கள் என தெரிவித்தார்.