சாலையை கடந்த குள்ளநரி கூட்டம்- செல்போனில் படம் பிடித்த வாகன ஓட்டிகள்
- யானைகள், மான், காட்டெருமை, சிறுத்தை, கரடி, உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீருக்காக ரோட்டை கடக்கும்.
- குள்ளநரிகள் ஒன்றன் பின் ஒன்றாக சுமார் 8 நரிகள் ரோட்டை கடந்தன.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, புலி, சிறுத்தை, காட்டு எருமை, கரடி உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அருகே வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடப்பது வாடிக்கையான ஒன்று தான்.
இதில் யானைகள், மான், காட்டெருமை, சிறுத்தை, கரடி, உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீருக்காக ரோட்டை கடக்கும்.
இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருக்கும் ஒருவர் நடுரோட்டில் குள்ளநரி கூட்டம் ஒன்று கடப்பதை பார்த்து அங்கேயே வாகனத்தை நிறுத்தி செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தார்.
குள்ளநரிகள் ஒன்றன் பின் ஒன்றாக சுமார் 8 நரிகள் ரோட்டை கடந்தன. பொதுவாகவே காலையில் நரி முகத்தில் முழித்தால் நல்லது நடக்கும் என முன்னோர்கள் சொல்வார்கள். அதேபோல் இவர் குள்ளநரியை பார்த்து விட்டு மகிழ்ச்சி அடைந்தார்.
அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகளும் குள்ள நரி கூட்டத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். மிகவும் கணிசமான எண்களில் இருக்கும் குள்ள நரிகளை பார்ப்பது இதுவே முதல்முறை என சுற்றுலா பயணிகள் கூறி மகிழ்ந்தார்.