தமிழ்நாடு

பெரியாறு அணை

தொடர் மழையால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2022-08-25 04:27 GMT   |   Update On 2022-08-25 04:27 GMT
  • முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
  • வைகை அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக உள்ளது

கூடலூர்:

பருவமழை கைகொடுத்த நிலையில் முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடிவரை எட்டியது. அதனைதொடர்ந்து தமிழகம் மற்றும் கேரள பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் சரிய தொடங்கியது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் மீண்டும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 1081 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1810 கனஅடியாக உயர்ந்துள்ளது. இேதபோல் அணையின் நீர்மட்டமும் 135.95 அடியிலிருந்து 136.25 அடியாக உயர்ந்துள்ளது. தமிழக பகுதிக்கு 933 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக உள்ளது. 832 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 769 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 124.14 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 14.2, தேக்கடி 19.2, கூடலூர் 5.2, உத்தமபாளையம் 1.8, வீரபாண்டி 2.4, அரண்மனைப்புதூர் 2.4, போடி 7.8, மஞ்சளாறு 1.4, பெரியகுளம் 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News