133 அடியை கடந்த முல்லைபெரியாறு அணை நீர்மட்டம்
- முல்லைபெரியாறு அணையிலிருந்து 1789 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- பெரியாறு 84.6, தேக்கடி 31.2, கூடலூர் 14.2, உத்தமபாளையம் 2.6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
கூடலூர்:
முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 5258 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 8143 கனஅடியாக அதிகரித்துள்ளது. 152 அடி உயரம் உள்ள முல்லைபெரியாறு அணையில் தற்போது 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 130.85 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 133.20 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2 அடி அதிகரித்திருப்பதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
அணையிலிருந்து 1789 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்இருப்பு 5446 மி.கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களும் இயக்கப்பட்டு 150 மெகாவாட்டுக்கு அதிகமாக மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.
71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 56.55 அடியாக உள்ளது. வரத்து 1695 கனஅடி, திறப்பு 969 கனஅடி, நீர் இருப்பு 2975 மி.கனஅடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 72.32 அடி, திறப்பு 6 கனஅடி.
பெரியாறு 84.6, தேக்கடி 31.2, கூடலூர் 14.2, உத்தமபாளையம் 2.6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.