தமிழ்நாடு

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மர்மமாக நின்ற காரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தபோது எடுத்தபடம். 

கலெக்டர் அலுவலக வளாகத்தில் 4 நாட்களாக நின்ற "மர்ம" காரால் பரபரப்பு

Published On 2024-03-27 08:05 GMT   |   Update On 2024-03-27 08:05 GMT
  • மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் சொகுசு கார் ஒன்று கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
  • மெட்டல் டிடெக்டர்கள் மூலமாக சோதனை நடத்தப்பட்ட நிலையில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.

மதுரை:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை தொடங்கி நகர சாலைகள் வரை சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணிக்கும் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி இந்த அதிரடி சோதனையை நடத்துகிறார்கள்.

இந்தநிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் சொகுசு கார் ஒன்று கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. முதலில் இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் அந்த காரை எடுக்காத நிலையில் வாகனத்திற்கான பதிவு எண் உள்ளிட்டவைகள் இல்லாமல் இருப்பதால் சந்தேகம் வலுத்தது.

அதன் அடிப்படையில் முதற்கட்டமாக காவல்துறையினர் 4 நாட்களாக நின்று கொண்டிருந்த காரை தீவிர விசாரணை செய்தனர். மேலும் மெட்டல் டிடெக்டர்கள் மூலமாக சோதனை நடத்தப்பட்ட நிலையில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவு பெறும் நிலையில் 4 நாட்களாக மர்ம கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News