தமிழ்நாடு

கோட்டையில் பறக்க விட மகாராஷ்டிராவில் இருந்து சென்னை வந்த தேசிய கொடி

Published On 2023-01-25 05:38 GMT   |   Update On 2023-01-25 05:38 GMT
  • மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற காதியில் தயாரிக்கப்பட்ட தேசிய கொடிகளையே ஏற்ற வேண்டும்.
  • விதிகளுக்கு உட்பட்டு சென்னையில் உள்ள காதி கிராமோத் யோக் பவன் வாயிலாக தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை:

நாட்டின் 74-வது குடியரசு தினம் நாளை (26-ந் தேதி) வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை கடற்கரை சாலையில் தேசிய கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

அதன் பிறகு தேசிய கொடி கோட்டையில் பறக்க விடப்படும். இந்த தேசிய கொடி ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற தேசிய கொடியாகும். மகாராஷ்டிரா மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட இந்த கொடி சென்னை வரவழைக்கப்பட்டு காதி கிராமோத் யோக் பவனில் தயாராக உள்ளது.

இந்த தேசிய கொடி தயாரிப்பு பற்றி காதி கிராமோத் யோக் பவன் மேலாளர் சுந்தர் கூறியதாவது:-

மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற காதியில் தயாரிக்கப்பட்ட தேசிய கொடிகளையே ஏற்ற வேண்டும்.

மத்திய அரசின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நான்டெக் மரத்து வாடாவில் காதி நிறுவனத்தில் நான்கு இழைகளால் தேசிய கொடிகள் தயாரிக்கப்படுகிறது.

இந்த தேசிய கொடிகளுக்கு என்று தனித்தனி அளவுகள் உள்ளது. கதர் வாரியம்தான் இந்த கொடிகளை விற்பனை செய்யும்.

அந்த வகையில் விதிகளுக்கு உட்பட்டு சென்னையில் உள்ள காதி கிராமோத் யோக் பவன் வாயிலாக தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது.

கோட்டையில் பறக்க விடப்படும் தேசிய கொடி உள்பட அனைத்து மத்திய-மாநில அரசு அலுவலகங்களும் நிறுவனங்களும் காதி நிறுவனத்தில்தான் தேசிய கொடியை வாங்குவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News