தமிழ்நாடு (Tamil Nadu)

பள்ளிகளுக்கு ஜனவரி 18ம் தேதி விடுமுறை இல்லை- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Published On 2023-01-16 07:24 GMT   |   Update On 2023-01-16 10:52 GMT
  • தமிழக பதிப்பாளர்கள் வெளிநாட்டிற்கு செல்லவும் எதிர்காலத்தில் அரசு திட்டமிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
  • தமிழகத்தின் 30 புத்தகங்கள் வெளிநாட்டு மொழிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.

சென்னை:

நந்தனம் ஒய்.எம்.சி. திடலில் 2023 சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சர்வதேச புத்தக கண்காட்சி இன்று முதல் வரும் 18-ந் தேதிவரை நடக்க இருக்கிறது.

சர்வதேச புத்தக கண்காட்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். அதன்படி சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கி இருக்கிறது. இதில் எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

3 நாள் நடைபெறுவதில் பங்கேற்க முடியாத வெளிநாட்டு பதிப்பாளர்கள் கூட வீடியோ கான்பரன்சிங் மூலமாக கூட இணையலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தின் 30 புத்தகங்கள் வெளிநாட்டு மொழிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.

அதேபோல் தமிழக பதிப்பாளர்கள் வெளிநாட்டிற்கு செல்லவும் எதிர்காலத்தில் அரசு திட்டமிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

புதன்கிழமை பள்ளிக்கு விடுமுறை தொடர்பாக எந்த முடிவும் அரசு எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காக்கர்லா உஷா பொது நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத் உள்ளிட்ட அதிகாரிகள் எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News