ஜெயில் கைதிகளுக்கு இனி கொண்டாட்டம் தான்- வாரத்தில் 3 நாட்கள் சிக்கன், முட்டை, சத்தான உணவு வகைகள்
- உணவு முறை மற்றும் உணவு அளவினை ஆண்டுக்கு ரூ.26 கோடி கூடுதல் செலவினத்தில் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
- கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இந்த புதிய உணவு திட்டத்தை புழல் சிறையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 9 மத்திய சிறை, 3 பெண்கள் தனிச்சிறை மற்றும் மாவட்ட சிறைகள், கிளை சிறைகள் என 138 சிறைகள் உள்ளன.
சிறைகளில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறைகளில் உள்ள கைதிகள் இதுவரை ஏ பிரிவு கைதிகள், பி பிரிவு கைதிகள் என பிரிக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கைதிகளுக்கு வாரத்தில் ஒரு நாள் சிக்கன் கறி வழங்கப்பட்டு வந்தது. முட்டையும், காய்கறி உணவுகளுடன், காலையில் பொங்கல், உப்புமா, கஞ்சி சட்னியும் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது சிறைவாசிகள் நலனுக்காக நிபுணர் குழுவினர் அறிக்கையின் படி உணவு முறை மற்றும் உணவு அளவினை ஆண்டுக்கு ரூ.26 கோடி கூடுதல் செலவினத்தில் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. உணவுக்கு ஒரு நபருக்கு ரூ.96-ல் இருந்து ரூ.135 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது
இதைத்தொடர்ந்து முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இந்த புதிய உணவு திட்டத்தை புழல் சிறையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
இதில் சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின் படி றைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள்:-