தமிழ்நாடு

கொரோனா காலத்தில் பணி செய்த நர்சுகள் மீண்டும் வேலை கேட்டு கைக்குழந்தையுடன் உண்ணாவிரதம்

Published On 2023-09-25 08:48 GMT   |   Update On 2023-09-25 10:09 GMT
  • பணி நியமன ஆணை 6 வாரத்திற்குள் அரசு வழங்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் கோர்ட்டு உத்தரவிட்டது.
  • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

சென்னை:

கொரோனா பேரிடர் காலத்தில் பணிபுரிந்த நர்சுகள் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். 3 ஆயிரம் செவிலியர்கள் தற்காலிக முறையில் பணி அமர்த்தப்பட்டனர். அவர்களது பணிக்காலம் முடிவடைந்ததால் அரசு அவர்களை கடந்த ஆண்டு பணியில் இருந்து விடுவித்தது.

இதை கண்டித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பாதிக்கப்பட்டுள்ள செவிலியர்களுக்கு உரிய பணி நியமன ஆணை 6 வாரத்திற்குள் அரசு வழங்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் கோர்ட்டு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததை கண்டித்து தொடர் உண்ணா விரதப் போராட்டம் தொடங்கியுள்ளது. சங்கத்தின் மாநில தலைவி விஜயலட்சுமி, துணை தலைவர் உதயகுமார், செயலாளர் ராஜேஷ், பொருளாளர் தேவிகா ஆகியோர் தலைமையில் கைக்குழந்தைகளுடன் நர்சுகள் உண்ணா விரதத்தில் ஈடுபட்டனர்.

பகல்-இரவாக தொடர்ந்து 3 நாட்கள் முகாமிட்டு போராட்டத்தில் பங்கேற்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். கைக்குழந்தைகளை கையில் ஏந்தி போராட்ட களத்தில் செவிலியர்கள் கலந்து கொண்டது பொது மக்களை கவர்ந்தது.

Tags:    

Similar News