தமிழ்நாடு

போலி மதுபான ஆலையில் இருந்து கைப்பற்றப்பட்ட எரிசாராயம் மற்றும் மூலப்பொருட்களை காணலாம்.

போலி மதுபான ஆலைக்கு அதிகாரிகள் "சீல்": 3,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

Published On 2024-03-29 09:35 GMT   |   Update On 2024-03-29 09:35 GMT
  • போலீசார் அங்கிருந்த சுமார் 3 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.
  • மதுபானங்கள் தயாரிப்பதற்காக வைத்திருந்த மூலப்பொருட்களையும் கைப்பற்றிய போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.

சிங்கம்புணரி:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அமைந்துள்ளது குமரப்ப குடிப்பட்டி கிராமம். அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய இங்கு தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் போலி மதுபான ஆலை இயங்குவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட மதுவிலக்கு பிரிவு கூடுதல் துணை சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமையிலான போலீசார் அந்த வனப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு மதுபான ஆலை செயல்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மதுபானம் தயாரித்து, பாட்டில்களை அடைத்து விற்பனைக்கு கொண்டு சென்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த சுமார் 3 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் மதுபானங்கள் தயாரிப்பதற்காக வைத்திருந்த மூலப்பொருட்களையும் கைப்பற்றிய போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இதுதொடர்பாக போலியான மதுபான ஆலை நடத்தி வந்த சிங்கம்புணரியை சேர்ந்த ராமசாமி மனைவி மங்களம் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News