பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா- குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாட்டம்
- சிறப்பு விருந்தினர்களாக குமரி எம்.பி விஜய்வசந்த், குளச்சல் எம்.பி ஜே.ஜி.பிரின்ஸ் கலந்துக் கொண்டனர்.
- பிறந்த நாள் முன்னிட்டு 121 மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்தநாளை முன்னிட்டு, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கே.டி.உதயம் தலைமையில் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு கேக் வெட்டியும், 121 மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கியும் சிறப்பித்தனர்.
காங்கிரஸ் பேரியக்க மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள், பேரூராட்சி நிர்வாகிகள், ஊராட்சிமன்ற நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்க துணை அமைப்புகளின் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.