தமிழ்நாடு

விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

Published On 2024-05-30 14:20 GMT   |   Update On 2024-05-30 14:20 GMT
  • பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தபின் விவேகானந்தர் மண்டபம் சென்றார்.
  • ஜூன் 1-ந்தேதி (சனிக்கிழமை) மாலை வரை அவர் தியானம் மேற்கொள்வார்.

மக்களவை தேர்தலின் சூறாவளி பிரசாரத்தை முடித்த பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய முடிவு செய்தார்.

இன்று தேர்தல் பிரசாரத்தை முடித்த அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார். கன்னியாகுமரி வந்தடைந்த அவர், பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் சென்றார். பின்னர் தனது தியானத்தை தொடங்கினார். இன்று தியானத்தை தொடங்கிய அவர் ஜூன் 1-ந்தேதி மாலை தியானத்தை நிறைவு செய்கிறார்.

ஜூன் 1-ந்தேதி கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்போது, மோடி தியானம் செய்வது தேர்தல் நடத்தை விதியை மீறுவதாகும். இதனால் தியானத்தை தடைவிதிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News