தமிழ்நாடு

வயநாடு நிலச்சரிவுக்கு தமிழ்நாடு காரணம் இல்லை- அமைச்சர் துரைமுருகன்

Published On 2024-08-06 02:31 GMT   |   Update On 2024-08-06 02:31 GMT
  • மேற்கு தொடர்ச்சி மலைகளில் தமிழ்நாடு கனிமவளத்தை எடுத்து விட்டார்கள்.
  • மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை மாநகராட்சி நிர்வாகம் விரைவாக முடிக்க வேண்டும்.

வேலூர்:

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு துயரசம்பவம் இதயம் உள்ளவர்களை எல்லாம் உருக வைத்து அழ வைத்த ஒரு நிகழ்வு. அதைக்கூட மத்தியஅரசு பேரிடராக அறிவிக்க மாட்டோம் என்றால் அவர்கள் இதயத்தில் இருப்பது இதயமா? அல்லது கல்லா? என்று தெரியவில்லை.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் தமிழ்நாடு கனிமவளத்தை எடுத்து விட்டார்கள். அதனால் தான் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் வயநாடு நிலச்சரிவுக்கு தமிழ்நாடு காரணம் இல்லை. பூகோளம் பற்றி தெரியாதவர்கள் தான் இப்படி தவறாக பேசுவார்கள்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க இருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு மாறுபட்ட கருத்து எதுவும் கிடையாது.

மேகதாது அணை பிரச்சனையில் அமைச்சர்கள் லஞ்சம் வாங்கி விட்டார்கள் என்று பா.ஜனதா மாநிலத்தலைவர் அண்ணாமலை விவரம் தெரியாமல் குற்றம் சாட்டி உள்ளார். அவர் விவரம் தெரிந்தவர் என்று நான் இதுவரை நினைத்திருந்தேன். தற்போதுதான் அண்ணாமலை விவரம் இல்லாதவர் என்று தெரிகிறது. வயநாடு நிலச்சரிவு பேரிடரை பிரதமர் மோடி பார்வையிடாதது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.

Tags:    

Similar News