தமிழ்நாடு

நடிகர் கருணாஸ் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Published On 2024-02-24 07:03 GMT   |   Update On 2024-02-24 07:05 GMT
  • பல யூடியூப் சேனலிலும் என்னை பற்றியும் நடிகை திரிஷா பற்றியும் பல்வேறு உண்மைக்கு மாறான பொய்யான அவதூறு கருத்துக்களை பலரும் பரப்பி வருகின்றனர்.
  • சமூக வலைதளங்களில் உள்ள வீடியோ பதிவினை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

சென்னை:

சேலம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ராஜூ நடிகை திரிஷா மற்றும் நடிகர் கருணாசை கூவத்தூருடன் தொடர்பு படுத்தி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக ராஜூவுக்கு நடிகை திரிஷா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தன்னை பற்றியும் அவதூறாக கூறியது பற்றி நடிகர் கருணாஸ் போலீசில் புகார் செய்தார்.

இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று மேலும் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-


கடந்த சில நாட்களுக்கு முன்பும் தமிழா பாண்டியன் மற்றும் பயில்வான் ரங்கநாதன் ஆகிய இரு நபர்களும் சமூக வலைதளங்களில் என்னை பற்றி பல்வேறு பொய்யான தகவலையும் மற்றும் சங்கதிகளையும் என் மீது வன்மம் கொண்டு அவதூறாக மற்றும் அருவருப்பான மற்றும் உண்மைக்கு மாறான செய்தியை பரப்பி உள்ளார்கள்.

மேலும் நடிகை திரிஷா மற்றும் சில நடிகைகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தேன் என்றும் உண்மைக்கு மாறாக பொய்யான செய்தியை விளம்பரத்துக்காக பரப்பி வருகிறார்கள். அதில் இம்மி அளவும் உண்மை இல்லாத பொழுதும் பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினராலும் பகிரப்பட்டு தற்போது வைரல் ஆகி உள்ளது. அதனை தொடர்ந்து பல யூடியூப் சேனலிலும் என்னை பற்றியும் நடிகை திரிஷா பற்றியும் பல்வேறு உண்மைக்கு மாறான பொய்யான அவதூறு கருத்துக்களை பலரும் பரப்பி வருகின்றனர். மேலும் மேற்படி நபர்கள் எந்த ஆதாரமும் இன்றி என் மீது பரப்பி வரும் பொய்யான தகவலால் என் பெயருக்கும் புகழுக்கும் சமுதாயத்தில் களங்கம் ஏற்படுத்தி உள்ளார்கள். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளேன்.

எனவே மேற்படி நபர்கள் மீதும் யூடியூப் சேனல்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து மேற்படி சமூக வலைதளங்களில் உள்ள வீடியோ பதிவினை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News