தமிழ்நாடு
தமிழக சட்டசபை- இன்று அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அ.தி.மு.க.வுக்கு தடை
- அவை மாண்பு, மதிப்பை குறைக்கும் வகையில் அ.தி.மு.க. செயல்படுகிறது.
- நினைப்பதை எல்லாம் பேசுவதற்கு இது பொதுக்கூட்ட மேடை அல்ல.
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் தொடங்கியது. அவை கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சபாநாயர் உத்தரவை அடுத்து அ.தி.மு.க. உறுப்பினர்களை அவை காவலர்கள் வெளியேற்றினர்.
இதன்பின் பேசிய சபாநாயகர் அப்பாவு, அவை மாண்பு, மதிப்பை குறைக்கும் வகையில் அ.தி.மு.க. செயல்படுகிறது. நினைப்பதை எல்லாம் பேசுவதற்கு இது பொதுக்கூட்ட மேடை அல்ல. கள்ளக்குறிச்சி சம்பவத்தை அரசியலாக்குகிறார்கள் என்று கூறினார்.
இதையடுத்து, இன்று ஒரு நாள் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு தடை விதித்தார்.
முன்னதாக, சட்டசபைக்கு வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.