தமிழ்நாடு

மின் கட்டண உயர்வை கண்டித்து தேனியில் நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-25 05:17 GMT   |   Update On 2022-07-25 05:17 GMT
  • மதுரை மாவட்டத்தில் இன்று அ.தி.மு.க. சார்பில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டதால் தேனியில் நடைபெறும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு தொண்டர்களை ஒருங்கிணைப்பதில் சிக்கல் ஏற்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தேனி:

தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் அ.தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதுரையில் நேற்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டத்தில் இன்று அ.தி.மு.க. சார்பில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டதால் தேனியில் நடைபெறும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு தொண்டர்களை ஒருங்கிணைப்பதில் சிக்கல் ஏற்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதனால் காரணமாக தேனியில் நாளை அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் தேனியில் மட்டும் தொண்டர்கள் ஒருங்கிணைப்பு இல்லாததால் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News