தமிழ்நாடு

8-ந்தேதி கிரிமினல் வழக்கு தொடருகிறேன்: அண்ணாமலையை சும்மா விடமாட்டேன்- டி.ஆர்.பாலு

Published On 2023-05-03 08:59 GMT   |   Update On 2023-05-03 11:47 GMT
  • வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வினர் பணியாற்றுவது குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
  • தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை என் மீது அவதூறு பரப்பும் வகையில் சொத்து சேர்த்ததாக கூறி உள்ளார்.

சென்னை:

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் மண்டல குழுத் தலைவர் பகுதிச் செயலாளர் வே.கருணாநிதி தலைமையில் எஸ்.எஸ்.மகாலில் நடைபெற்றது.

இதில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., தமிழக சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்.எல்.ஏ. இ. கருணாநிதி, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி உள்பட பலர் பங்கேற்றனர்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வினர் பணியாற்றுவது குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கூட்டத்திற்கு பிறகு டி.ஆர்.பாலு எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை என் மீது அவதூறு பரப்பும் வகையில் சொத்து சேர்த்ததாக கூறி உள்ளார். 21 கம்பெனிகள் என்னுடையது என்று கூறி உள்ளார். அதில் 3 நிறுவனங்களில் மட்டுமே பங்குதாரராக உள்ளேன். எனக்கு சொந்தமாக எந்த நிறுவனமும் கிடையாது. எந்த கம்பெனியிலும் நான் டைரக்டர் கிடையாது.

நான் தேர்தலில் நிற்கும் போதே எனது சொத்து விவரங்களை தெரிவித்துள்ளேன். என் மீது அவதூறு பரப்பிய அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளேன். அவரை சும்மா விடமாட்டேன். வருகிற 8-ந்தேதி அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர உள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News