- அ.தி.மு.க. பா.ஜனதாவோடு கூட்டணி வைக்க கூடாது.
- அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை வலிமையற்ற தலைமை.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நேற்று திடீரென்று மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். அவர் அ.தி.மு.க. பற்றியும், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது பற்றியும் அன்று சொன்னதும்... இன்று சொல்வதும்... கட்சியினர் மத்தியில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
அன்று... பா.ஜனதா அரசு சி.ஏ.ஏ. சட்டத்தை கொண்டு வந்த போது அ.தி.மு.க. ஆதரித்தாலும் அன்வர் ராஜா பாராளுமன்றத்தில் அதை எதிர்த்து பேசினார். பா.ஜனதா சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி. அ.தி.மு.க. பா.ஜனதாவோடு கூட்டணி வைக்க கூடாது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை வலிமையற்ற தலைமை. கட்சி வலுப்பட சின்னம்மா வரவேண்டும்.
இன்று... குழுவோடு ஒத்துபோக தெரியாதவன் உயிரோடு இருந்தாலும் செத்தவர்களுக்கு சமம் என்று திருவள்ளுவர் கூறி இருக்கிறார். நான் அ.தி.மு.க. காரன்தான். இடையில் ஏற்பட்ட ஒரு சிறிய சறுக்கலால் இந்த நிலை ஏற்பட்டது. இப்போது மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன். கட்சியின் சட்டத்திட்டங்கள் எனக்கு தெரியும். அதற்கு உட்பட்டு பணியாற்றுவேன். பா.ஜனதாவோடு எந்த கட்சிதான் கூட்டணி வைக்கவில்லை. காங்கிரஸ் தவிர எல்லா கட்சிகளும் பா.ஜனதாவோடு கூட்டணி கட்சிகள்தான். வருகிற தேர்தலில் ராமநாதபுரத்தில் பா.ஜனதா போட்டியிட்டால் பா.ஜனதாவுக்கு ஆதரவாகவும் வாக்கு கேட்பேன்.
அரசியல்ன்னா இப்படித்தான்.