தமிழ்நாடு (Tamil Nadu)

ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து என 3 முறை எச்சரித்ததா உளவுத்துறை?

Published On 2024-07-06 08:39 GMT   |   Update On 2024-07-06 08:39 GMT
  • பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திருமலை திட்டம் போட்டு கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
  • ஆம்ஸ்ட்ராங்கின் கவனத்தை திசை திருப்பி பின்புறமாக இருந்து இடது பக்கமாக கழுத்தில் கொலையாளிகள் வெட்டியுள்ளனர்.

சென்னை:

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 8 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் போட்டு கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வீடு உள்ள பகுதியில் இருக்கும் பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல ஒருவாரமாக நோட்டமிட்டு வந்த திருமலை, ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி தான் கட்டி வரும் வீட்டருகே குறைந்த அளவிலான நண்பர்களுடன் வருவதை நோட்டமிட்டு புன்னை பாலுவுக்கு தகவல் கொடுத்துள்ளதாகவும், இதன்பிறகே கொலை அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து என உளவுத்துறையும், குற்றப்புலனாய்வு பிரிவும் 3 முறை எச்சரித்ததாக தகவலும் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் குத்துச்சண்டை தெரிந்தவர் என்பதால் அவரை எவ்வாறு கொலை செய்வது என திட்டமிட்டு கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கின் கவனத்தை திசை திருப்பி பின்புறமாக இருந்து இடது பக்கமாக கழுத்தில் கொலையாளிகள் வெட்டியுள்ளனர். கணுக்காலில் வெட்டி நிலைகுலையச் செய்த பின் சரமாரியாக வெட்டியதில், ஆம்ஸ்ட்ராங்கின் இடது கழுத்தின் மேல் பகுதி, காது, இடது சுண்டு விரல் துண்டானதாக கூறப்படுகிறது.

வெட்டும் போது தடுக்க முயன்றால் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யவும் தயார் நிலையில் இருந்துள்ளனர்.

Tags:    

Similar News