தமிழ்நாடு
தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 14 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர்
- ஜூலை 1-ம் நாள் முதல் சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் அடிப்படைப் பயிற்சி தொடங்க உள்ளது.
- நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் க.நந்தகுமார் கலந்து கொண்டனர்.
சென்னை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-I-க்கான பணிகளில் மொத்தம் 95 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், 14 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பணிநியமன ஆணைகள் பெற்றுக்கொண்ட பயிற்சி அலுவலர்களுக்கு வரும் ஜூலை 1-ம் நாள் முதல் சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் அடிப்படைப் பயிற்சி தொடங்க உள்ளது.
நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் க.நந்தகுமார் கலந்து கொண்டனர்.