தமிழ்நாடு

கோரிக்கைகளை நிறைவேற்றாததால் தென்னை விவசாயிகளை திரட்டி அ.தி.மு.க. போராட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2023-06-30 10:03 GMT   |   Update On 2023-06-30 10:03 GMT
  • கடந்த இரண்டு ஆண்டுகால தி.மு.க. அரசின் தவறான கொள்கைகளால் வேளாண் தொழில் நலிவடைந்துள்ளது.
  • தென்னை விவசாயிகள் தி.மு.க. ஆட்சியில் வாழ்விழந்து நிற்கும் அவலம் தமிழகத்தின் சாபக்கேடாகும்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த இரண்டு ஆண்டுகால தி.மு.க. அரசின் தவறான கொள்கைகளால் வேளாண் தொழில் நலிவடைந்துள்ளது. வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் என்று மக்களை திசை திருப்பும் இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, விவசாயம் தொடர்பான தொழில்களைக் காக்க எவ்வித முறையான நடவடிக்கையும் எடுக்காது வேளாண் பெருமக்களை ஏமாற்றி வருகிறது. குறிப்பாக, தென்னை விவசாயிகள் தி.மு.க. ஆட்சியில் வாழ்விழந்து நிற்கும் அவலம் தமிழகத்தின் சாபக்கேடாகும்.

தி.மு.க. அரசு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தென்னையை பருவ கால பயிராகக் கருதாமல், ஆண்டுக்கு ஏழு முறை குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெய்யை நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும். தென்னையில் இருந்து தயாரிக்கப்படும் உப பொருட்களை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும். இல்லையெனில், தென்னை விவசாயிகளை ஒன்று திரட்டி, அ.தி.மு.க. மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என தி.மு.க. அரசை எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News