தமிழ்நாடு
null

விளையாட்டு தொடர்பாக எந்த கோரிக்கை வைத்தாலும் தமிழகத்துக்கு உதவ தயாராக உள்ளேன்- ரோஜா பேட்டி

Published On 2023-04-25 08:09 GMT   |   Update On 2023-04-25 09:55 GMT
  • ஆந்திராவில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையில் நேரடியாக உதவி கிடைத்துள்ளது.
  • அனைத்து தரப்பில் இருந்தும் ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான ரோஜா பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆந்திராவில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையில் நேரடியாக உதவி கிடைத்துள்ளது. இதனால் அனைத்து தரப்பில் இருந்தும் ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

நகரி மற்றும் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள நெசவாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஆண்டு தோறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகள் தயார் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

ஜவுளி பூங்கா அமைக்கவும் தொடர்ந்து மத்திய அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி வலியுறுத்தி வருகிறோம். தற்போது உயர்ந்துள்ள மின்சார கட்டணம் நெசவாளர்களை பாதிக்காத வகையில் ஆந்திர மாநில அரசு சிறப்பு உத்தரவு வழங்கி உள்ளது.

அந்த உத்தரவு ஏப்ரல் இறுதி வாரத்தில் அமலுக்கு வரும். அப்போது நெசவாளர்கள் மீதான மின்சார கட்டணம் அதிகமின்றி இருக்கும்.

தமிழ் வழிக்கல்வியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்க கோரிக்கை வைத்தேன். அதை விரைவாக வழங்கி முதல்வர் சிறப்பாக செயல்பட்டார். தமிழக அரசியலில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார். அதேபோல் நானும் அமைச்சராக உள்ளேன். இரண்டு பேரும் திரைப்படத்துறையில் இருந்து வந்தவர்கள் என்பதோடு ஒரே துறையில் பயணிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தற்போதைய நிலையில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநராக உள்ளேன். தமிழகத்திற்கு விளையாட்டு தொடர்பாக எந்த கோரிக்கை வைத்தாலும் நான் உறுதுணையாக இருந்து செய்து கொடுக்க தயாராகவே உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News