தமிழ்நாடு

சென்னையில் பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டியவர்களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்

Published On 2023-02-24 08:58 GMT   |   Update On 2023-02-24 08:58 GMT
  • திடக்கழிவு விதிகளை மீறி அதிகளவு கொட்டிய வாகனத்தை பறிமுதல் செய்து போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள் திடக் கழிவுகளை முறையாக தாங்களே கையாள வேண்டும்.

சென்னை:

சென்னை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் மக்கும், மக்காத குப்பைகள் என பிரித்து சேகரிக்கப்படுகின்றன. தினமும் 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பணியாளர்கள் மூலம் பெறப்படுகின்றன.

திடக்கழிவுகளை அதிகளவு உருவாக்கும் கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தாங்களே கையாள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் அதிகளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள் திடக் கழிவுகளை முறையாக தாங்களே கையளாமல் பொது இடங்களில் கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் ராயபுரம் மண்டலம் வார்டு 63-க்கு உட்பட்ட இ.பி. லிங்க சாலை, தெற்கு கூவம் சாலை ஆகிய பகுதிகளில் அதிகளவு திடக்கழிவுகள் கொட்டியவர்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதமும், கட்டிட கழிவுகள் கொட்டிய நபர்களுக்கு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் போலீசில் 15 புகார்கள் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ். ரெயில் நிலையம் அருகில் திடக்கழிவு விதிகளை மீறி அதிகளவு கொட்டிய வாகனத்தை பறிமுதல் செய்து போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள் திடக் கழிவுகளை முறையாக தாங்களே கையாள வேண்டும்.

பொது இடங்களில் கொட்டக்கூடாது. மீறும் நபர்கள் மீது அபராதம் விதித்து காவல் துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News