தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

Published On 2023-01-22 14:09 GMT   |   Update On 2023-01-22 14:09 GMT
  • ஜல்லிக்கட்டு போட்டிகளில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 3 பேர் உயிரிழந்தனர்.
  • முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிகளில் பங்கேற்ற வீரர்களில் 3 பேர் மாடு முட்டி படுகாயமடைந்து பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கே.ராயவரம் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த கணேசன், சிராவயல் ஜல்லக்கட்டில் உயிரிழந்த பூமிநாதன், தடங்கம் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த சிறுவன் கோகுல் ஆகியோரின் குடும்பங்களுக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News