தமிழ்நாடு

பழமுதிர்சோலை முருகன் கோவிலில் பஞ்சாமிர்த விற்பனை ரூ.20 லட்சத்தை எட்டியது

Published On 2023-12-13 09:41 GMT   |   Update On 2023-12-13 09:41 GMT
  • கோவிலில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பஞ்சாமிர்த விற்பனை தொடங்கப்பட்டது.
  • பஞ்சாமிர்தம் 250 கிராம் 30 ரூபாய்க்கும், 500 கிராம் 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

மதுரை:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாக சிறப்பு பெற்றது பழமுதிர்சோலை முருகன் கோவில். பிரசித்தி பெற்ற அழகர் மலையில் உள்ளதால் இங்கு பக்தர்களின் வருகை எப்போதும் அதிகமாக இருக்கும்.

அத்துடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இக்கோவிலில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பஞ்சாமிர்த விற்பனை தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 5 மாதங்களில் ரூ. 13 லட்சத்திற்கு பஞ்சாமிர்தம் விற்பனை ஆனது. இந்த ஆண்டு அதே கால கட்டத்தில் பஞ்சாமிர்த விற்பனை ரூ.20 லட்சத்தை எட்டியுள்ளது. பஞ்சாமிர்தம் 250 கிராம் 30 ரூபாய்க்கும், 500 கிராம் 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

முருகப்பக்தர்கள், ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டினரும் பஞ்சாமிர்தத்தை விரும்பி வாங்குவதால் விற்பனை அதிகரித்துள்ளதாக கோவில் நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News