தமிழ்நாடு

ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனையா? டாஸ்மாக் நிர்வாகம் அளித்த பதில்

Published On 2024-07-17 06:13 GMT   |   Update On 2024-07-17 07:16 GMT
  • நாளிதழில் வெளியான செய்தி குறித்து பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்தனர்.
  • டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுவை அறிமுகம் செய்யும் திட்டமும் இல்லை எனவும் டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பீர், ஒயின், மணமூட்டப்பட்ட மதுவகைகள் போன்ற குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுவகைகளை சொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் வினியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து வருவதாகவும் நாளிதழில் செய்திகள் வெளிவந்தன.

நாளிதழில் வெளியான செய்தி குறித்து பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுவை அறிமுகம் செய்யும் திட்டமும் இல்லை எனவும் டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News