தமிழ்நாடு

22 மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள்

Published On 2024-02-09 05:02 GMT   |   Update On 2024-02-09 05:02 GMT
  • மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • மெட்ரோ ரெயில் பயணிகளை மற்ற பொது போக்குவரத்துடன் இணைக்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை:

சென்னையில், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் 3 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.

மெட்ரோ ரெயில் பயணிகளை மற்ற பொது போக்குவரத்துடன் இணைக்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பயணிகள் இடையூறு இல்லாமல் ரெயில் நிலையங்களுக்கு செல்லவும் தடையின்றி மற்ற போக்குவரத்துகளுக்கு மாறவும் அதிகளவு பயணிகளை கையாளும் 22 மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. அண்ணா நகர், சின்னமலை, வண்ணாரப்பேட்டை, அரசு எஸ்டேட், ஈக்காட்டு தாங்கல், தேனாம்பேட்டை, ஐகோர்ட்டு, ஆயிரம் விளக்கு, மண்ணடி, பரங்கி மலை, தண்டையார்பேட்டை நிலையங்களில் தலா ஒரு நகரும் படிக்கட்டும், நேரு பூங்கா, எழும்பூர், நங்கநல்லூர் சாலை, கிண்டி, ஏ.ஜி.-டி.எம்.எஸ்., தியாகராயா கல்லூரி மற்றும் நந்தனம் ரெயில் நிலையங்களில் கூடுதலாக 2 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படும்.

அண்ணாநகர் பூங்கா, நிலையத்தில் 3 நகரும் படிக்கட்டுகளும், வடபழனி மற்றும் மீனம்பாக்கத்தில் 4 நகரும் படிக்கட்டுகளும் திருமங்கலத்தில் 5 எஸ்க லேட்டர்களும் அமைக்கப்பட உள்ளன.

இந்த மாதத்தில் பணிகள் தொடங்கி ஒரு வருடத்தில் நிறைவடையும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்புக்கு முன்பு மெட்ரோ ரெயில் பயணிகள் எண்ணிக்கை 1.16 லட்சமாக இருந்தது. இப்போது 2.73 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயணித்து வருவதால் இந்த வசதிகள் செய்யப்படுகின்றன. அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் முதலில் கான்கோர்ஸ் மற்றும் தெரு நிலைகளை இணைக்கும் வகையில் மேல் நோக்கி மற்றும் கீழ்நோக்கி நகரும் படிக்கட்டுகள் வடிவமைக்கப்பட்டன. ஆனால் திட்டச் செலவை மிச்சப்படுத்த கட்டடிடம்-1 கட்டும்போது அவை நிறுவப்படவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News