அ.ம.மு.க. கட்சி வளர்ச்சிக்கு நிதி அளிக்க வேண்டும்- டி.டி.வி.தினகரன் வேண்டுகோள்
- கட்சி உடன் பிறப்புகள் தங்களால் இயன்ற நிதியினை கட்சி வளர்ச்சி நிதியாக அளிக்க வேண்டுகிறோம்.
- தாங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் நம்முடைய லட்சியப் பயணத்தை தொய்வின்றி நடத்திட உதவிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை:
அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜெயலலிதாவின் மக்கள் நலக் கொள்கைகளை தொடர்ந்து நிலை நாட்டிட போராடி வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சிக்கான பல்வேறு நிலையிலுள்ள கட்சி நிர்வாகிகளும், ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்களுக்கும் ஓர் வேண்டுகோள்.
கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் அவரை நேரில் சந்திப்பவர்கள் இனி பொன்னாடைகள், பூங்கொத்துக்கள், பரிசுப் பொருட்கள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதை கண்டிப்பாக தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதற்கு பதிலாக கட்சி உடன் பிறப்புகள் தங்களால் இயன்ற நிதியினை கட்சி வளர்ச்சி நிதியாக கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் அளிக்க வேண்டுகிறோம்.
தாங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் நம்முடைய லட்சியப் பயணத்தை தொய்வின்றி நடத்திட உதவிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.