சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைப்பு
- சட்டசபை செயலகம் மூலம் தமிழக அரசின் சட்டத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- மசோதாக்களை கவர்னருக்கு மீண்டும் அனுப்பும் பட்சத்தில் கவர்னர் அதை ஏற்று கையெழுத்திடுவாரா?
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 10 சட்ட மசோதாக்களை காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைத்து அதை அரசுக்கு திருப்பி அனுப்பி இருக்கும் நிலையில் மறுபடியும் அதே மசோதாக்கள் சட்டசபையில் இன்று நிறைவேறி உள்ளது.
இந்த மசோதாக்களை கவர்னருக்கு மீண்டும் அனுப்பும் பட்சத்தில் கவர்னர் அதை ஏற்று கையெழுத்திடுவாரா? அல்லது ஏற்க மறுப்பாரா? என்று அரசியல் நிபுணர்கள் வினா எழுப்பி வருகின்றனர்.
சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் இன்று மாலையே சட்டசபை செயலகம் மூலம் தமிழக அரசின் சட்டத் துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு இன்றே அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.
சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பும் பட்சத்தில் அதே மசோதா மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துதான் ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.