தமிழ்நாடு

தீரன் சின்னமலை சிலைக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை


தீரன் சின்னமலை நினைவுநாள்- எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் புடை சூழ மாலை அணிவித்தார்

Published On 2022-08-03 10:09 GMT   |   Update On 2022-08-03 10:09 GMT
  • தீரன் சின்னமலை சிலைக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
  • ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி நின்று எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வாழ்க... வாழ்க.. என வாழ்த்தி கோஷமிட்டனர்.

சென்னை:

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியின்போது மழை பெய்து கொண்டிருந்தபோதும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி நின்று எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வாழ்க... வாழ்க.. என வாழ்த்தி கோஷமிட்டனர்.

நிகழ்ச்சியில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், நிர்வாகிகள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, பொன்னையன், ஜெயக்குமார், வளர்மதி, விஜயபாஸ்கர், காமராஜ், மோகன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, ஆதிராஜாராம், தி.நகர் சத்யா, வேளச்சேரி அசோக், வெங்கடேஷ்பாபு, கே.பி.கந்தன், ராஜேஷ் மற்றும் சிவராஜ், பகுதி செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ், சி.கே.முருகன், ஷேக் அலி, சைதை சுகுமார், என்.எஸ்.மோகன், ஷேக் அப்துல்லா, வேளச்சேரி மூர்த்தி, வக்கீல் சதாசிவம், டாக்டர் பரமசிவன், எம்.ஜி.ஆர்.நகர் குட்டி, வைகுண்ட ராஜா, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News