தமிழ்நாடு

வனப்பகுதியில் உள்ள சாலையில் ஜாலியாக செல்லும் புலிக்குட்டிகளை காணலாம்.

சத்தியமங்கலம் அருகே சாலையில் ஜாலியாக சென்ற புலிக்குட்டிகள்

Published On 2023-10-13 04:48 GMT   |   Update On 2023-10-13 04:48 GMT
  • புலிகள், சிறுத்தைகள், கரடிகள், யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன.
  • புலிகள் காப்பகத்தின் வெளிப்புற பகுதிகளில் அடிக்கடி புலியின் நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்து வருகின்றனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் "சத்தியமங்கலம் புலிகள் காப்பக" வனப்பகுதி உள்ளது.

இங்கு புலிகள், சிறுத்தைகள், கரடிகள், யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக இந்த பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு புலிகளின் எண்ணிக்கை வனப்பகுதியில் கணிசமாக அதிகரித்து வருகிறது.

இதனால் புலிகள் காப்பகத்தின் வெளிப்புற பகுதிகளில் அடிக்கடி புலியின் நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடம்பூரில் இருந்து மலைப்பகுதியில் உள்ள குன்றிவனம் கிராமத்திற்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் 2 புலிக்குட்டிகள் சாவகாசமாக நடந்து சென்று கொண்டிருந்தது. இந்த புலிக்குட்டிகள் தங்களுக்குள் விளையாடிக்கொண்டே ஜாலியாக சென்றது.

உடனடியாக பஸ்சின் வேகத்தை குறைத்த டிரைவர் புலிக்குட்டிகள் வனப்பகுதிக்குள் செல்லும் வரை மிதமான வேகத்தில் பஸ்சை இயக்கியுள்ளார். தாய் புலி அருகில் இல்லாமல் குட்டிகள் அப்பகுதியில் சுற்றி திரிந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பஸ்சில் இருந்தவர்கள் எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

Similar News