தமிழ்நாடு (Tamil Nadu)

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறையாக அறிவிப்பு- தமிழக அரசு

Published On 2024-10-19 07:21 GMT   |   Update On 2024-10-19 08:58 GMT
  • சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 31-ந்தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாளான நவ.1-ந்தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு நவ.1-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக 9-ந்தேதி அன்று வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஏற்று விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags:    

Similar News