தமிழ்நாடு (Tamil Nadu)

JEE தேர்வில் தேர்ச்சி: திருச்சி NIT-ல் சீட் பெற்று பழங்குடியின மாணவிகள் சாதனை

Published On 2024-07-08 14:01 GMT   |   Update On 2024-07-08 14:01 GMT
  • JEE தேர்வில் பழங்குடியின மாணவிகள் ரோஹிணி, சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை.
  • திருச்சி NIT-ல் சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.

2024 JEE தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ரோஹிணி, சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.

இதன்மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி NIT-ல் சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.

JEE தேர்வில் மாணவி ரோஹிணி 73.8% மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பிடித்துள்ளார்.

திருச்சி NIT-ல் மாணவி ரோஹிணி வேதிப் பொறியியலும், சுகன்யா உற்பத்தி பொறியியலும் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News