வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது
- மணவாளநகர் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தபோது ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்ந்து இருந்து தெரியவந்தது.
- கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்கை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் கிராமத்தில் ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக மணவாள நகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மணவாளநகர் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தபோது ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்ந்து இருந்து தெரியவந்தது.
அந்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த அமித் பண்டிராஜ், கவுதம் (26) ஆகிய இருவரும் கஞ்சா செடி வளர்த்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி தலைமையிலான போலீசார் திருவள்ளூரில் உள்ள பள்ளி அருகே கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்கை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.