தமிழ்நாடு
துணை முதல்வர் பதவி... ஆதவ் அர்ஜூன் கருத்தை ஏற்க முடியாது- வன்னியரசு
- ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விசிகவின் அடிப்படை கொள்கை.
- திமுகவுடன் கூட்டணி சுமூகமாக உள்ளது.
சென்னை:
சினிமாவில் இருந்து வந்தோருக்கு துணை முதல்வர் பதவி வரும்போது திருமாவுக்கு கூடாதா? என்று துணை முதல்வர் பதவி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதவ் அர்ஜூன் கூறி இருந்தார்.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு கூறியதாவது:
* துணை முதல்வர் பதவி குறித்து ஆதவ் அர்ஜூன் கூறிய கருத்தில் ஏற்பில்லை.
* ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விசிகவின் அடிப்படை கொள்கை. அதில் எந்த மாற்றம் இல்லை.
* ஆதவ் அர்ஜூன் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்துதான். கட்சியின் கருத்தல்ல.
* திமுகவுடன் கூட்டணி சுமூகமாக உள்ளது. 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று கூறினார்.