த.வெ.க மாநாட்டின்போது மழை பெய்தால் என்ன செய்வீர்கள் ?- விழுப்புரம் காவல்துறை கேள்வி
- த.வெ.கவிற்கு 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- வாகன நிறுத்துமிடத்தை இதுவரை நீங்கள் உறுதி செய்து தரவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. மாநாட்டிற்கு மிக பிரமாண்டமான மாநாட்டு மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வரும் 27ம் தேதி மாநாடு நடக்கும்போது மழை பெய்தால் லட்சக்கணக்கில் வரும் தொண்டர்களுக்கு என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள் ?
வாகன நிறுத்துமிடத்தை இதுவரை நீங்கள் உறுதி செய்து தரவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். தொண்டர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தை உடனடியாக தேர்வு செய்து, அதற்கான வரைபடங்களை ஒப்படைக்க வேண்டும்.
மாவட்ட வாரியாக எத்தனை வாகனங்கள், எந்த வகையான வாகனங்கள் வரும் என்ற பட்டியலை முன்கூட்டியே காவல்துறைக்கு தர வேண்டும்.
ஏற்கனவே 33 நிபந்தனைகளில், 17ஐ கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்திய போலீசார், மீண்டும் 5 கேள்விகள் எழுப்பி நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.