தமிழ்நாடு

வின் டிவி தேவநாதனுக்கு ஆகஸ்ட் 28-ந்தேதி வரை நீதிமன்ற காவல்

Published On 2024-08-14 12:26 GMT   |   Update On 2024-08-14 12:26 GMT
  • 140-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்ததன்பேரின் திருச்சியில் நேற்று கைது.
  • சென்னை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட் நிலையில் சிறையில் அடைப்பு.

மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவன மோசடி வழக்கில் வின் டிவி உரிமையாளர் தேவநாதன் யாதவ் திருச்சியில் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தேவநாதனை சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி வருகிற 28-ந்தேதி வரை (14 நாட்கள்) சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி தேவநாதன் சிறையில் அடைக்கப்படுகிறார்.

சுமார் 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக 140-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருந்தனர். இநத் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் நிரந்தர வைப்பு நிதி வைத்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். டெபாசிஸ்ட் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்பை ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.

சுமார் 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News